ராசிபுரம் அருகேயுள்ள குருசாமிபாளையம் செங்குந்தர் மகாஜன சங்கம் சார்பில் சோழப்பேரரசின் ராஜகுரு ஒட்டக்கூத்தர் குருபூஜை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.விழாவில் நாமக்கல் மாவட்ட செங்குந்தர் மகாசன சங்கத் தலைவர் மதிவாணன் பங்கேற்று சுப்பிரமணியர் ஆலயத்தின் அருகில் செங்குந்தர் சமுதாயக்கொடியேற்றிப் பேசினார். ஊர் பெரியதனக்காரர் டி.கே.ஏ.தியாகராஜன் ஒட்டக்கூத்தரின் படத்திற்கு மாலை அணிவித்து குருபூஜை நடத்தி வைத்தார். விழாவில் குருக்கப்புரம் பாரதி வித்யாமந்திர் பள்ளித் தாளாளர் குணசேகரன், மருந்தாளுநர் பாவானிகோபால், பேராசிரியர் நாகராஜன், ஆசிரியர் கண்ணன், தமிழரசன் உள்ளிட்ட பலரும் ஒட்டக்கூத்தர் வரலாறு குறித்துப் பேசினர். இனி வரும் காலங்களில் கவிசக்ரவர்த்தி ஒட்டக்கூத்தர் படைப்புகளின் மீது பேச்சுபோட்டி, கட்டுரை போட்டி போன்றவை நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. விழாவில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன், செயற்குழு உறுப்பினர் ஆர்.ஜோதிகிருஷ்ணன். துணைத் தலைவர் பாலப்பாளையம் சுந்தரம், தோனமேடு இணைச் செயலாளர் ஈஸ்வரன், சீராப்பள்ளி இணைச் செயலாளர் தங்கவேலு, பாலப்பாளையம் பெரியதனக்காரர் கணேசன், காரியக்காரர் குட்டி துரைசாமி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
ராஜகுரு ஒட்டக்கூத்தர் குருபூஜை விழா
RELATED ARTICLES