இல்லையெனில் விரைவில் மூடப்படும்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தபால் நிலையத்தில் செயல்பட்டு வரும் ரெயில் முன்பதிவு மையத்தை ராசிபுரம் சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த ரெயில் பயணிகள் முறையாக பயன்படுத்திக் கொள்ளவில்லையெனில் மூடப்பட்டு நிலைக்கு தள்ளப்படும் என சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
ராசிபுரம் அஞ்லகத்தில் அஞ்சல் சேவை, ஸ்டாம்ப் விற்பனை, துரித பார்சல், சிறு சேமிப்புத் திட்டம், அஞ்சல் ஆயுள் காப்பீடு, தங்க நாணயம் விற்பனை, மாதாந்திர சேமிப்புத்திட்டம், செல்வமகள் சேமிப்பு திட்டம், சேமிப்பு பத்திரம் விற்பனை, இரட்டிப்பு திட்டம், விபத்துக்காப்பீடு திட்டம் போன்ற சேவைகள் மட்டுமின்றி வங்கிகளுக்கு இணையாக ஆன்லைன் சேவைகள், ஏடிஎம் கார்டு வசதி போன்ற சேவையும் செய்துவருகிறது. மேலும் மாவட்டத்தில் ராசிபுரம் அஞ்சலகத்தில் மட்டும் தான் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் அலுவலகமும் செயல்பட்டு வருகிறது.
ராசிபுரம் நகரில் ரெயில் நிலையம் உள்ளது. ரெயில் நிலையத்தில் டிக்கெட் கவுன்டர் இருந்தும், நடப்பு டிக்கெட் மட்டும் பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளது. முன்பதிவு வசதி இல்லை. இங்கு முன்பதிவு வசதி வேண்டும் என பயணிகள் கேட்டுவருகின்றனர். ஆனால் தபால் நிலையத்தில் உள்ள முன்பதிவு மையத்தை பயன்படுத்துதில்லை. . அஞ்சலகத்தில் செயல்படும் மையத்தில் நாளொன்றுக்கு அதிகபட்சம் 4 பயணிகள் மட்டுமே பயன்படுத்திக்கொள்கின்றனர். இதனால் அஞ்சலக ரெயில் முன்பதிவு சேவையை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த ரெயில் பயணிகள் சாதாரண வசதி, படுக்கை வசதி, ஏசி ரெயில் பெட்டி வசதி போன்றவற்றிற்கு அஞ்சலக ரெயில் முன்பதிவு மையத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என ராசிபுரம் ரயில் பயணிகள் நல சங்கத்தினர் வலியுறுத்துயுள்ளனர்.
ராசிபுரம் அஞ்சலகத்தில் ஏசி பெட்டிகளுக்கு தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு காலை 10 மணிக்கும், ஏசி அல்லாத பெட்டிகள் தட்கல் முன்பதிவுக்கு காலை 11 மணிக்கும் மேற்கொள்ளப்படுகிறது. இதே போல் படுக்கை வசதி கொண்ட சாதாரண பெட்டிகள் முன்பதிவுகள் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை வேலை நாட்களில் முன்பதிவு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.