ராசிபுரம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையோரங்களில் நடப்பட்ட மரக்கன்றுகள் பராமரிப்பு பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ராசிபுரம் புறவழிச்சாலைகளின் இருபுறமும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்ட வந்த நிலையில், குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்றதாலும், மழை காற்றாலும் சேதமடைந்து வருகின்றன. இந்நிலையில், நெடுஞ்சாலை பணியாளர்களால் சேதமடைந்து சாய்ந்த மரக்கன்றுகள் சீரமைத்து, அரண் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முழுவதும் சேதமடைந்த மரக்கன்றுகளுக்கு பதிலாக புதிய மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. இப்பணிகளை ராசிபுரம் நெடுஞ்சாலைத்துறை உதவிக் கோட்டப்பொறியாளர் வ.கு.ஜெகதீஸ்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.





