நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டு மலையில் இருந்து உருண்டு வந்த பெரும்பாறைகளால் அப்பகுதியினர் அச்சமடைந்துள்ளனர்.
ராசிபுரம் அருகேயுள்ள போதமலை பகுதியில் மேலுர், கீழுர், கெடமலை என 3 மலை கிராமங்கள் உள்ளன . இந்த மலை கிராமத்திற்க்கு இதுவரை பாதை வசதி இல்லாத நிலையில் மத்திய மாநில அரசுகள் அனுமதி பெற்று நிதி ஒதுக்கி பாதை அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த சிலநாட்களாக இப்பகுதிகளில் அதிக மழை பெய்துள்ளது. இதனால் மண் சரிவு ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. இதனால் சனிக்கிழமை வடுகம் பகுதியில் இருந்த மலை அடிவாரப்பகுதியில் மலைப்பகுதியில் மலையில் இருந்து திடீரென பெரிய அளவிலான இரண்டு பாறைகள் கீழே உருண்டு வந்ததுள்ளது. பெரும் சத்தம் ஏற்பட்டதை பார்த்து மலை அடிவாரத்தில் குடியிருக்கும் கிராமப் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதனை தொடர்ந்து தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் அப்பகுதிக்கு சென்று வி்சாரணை நடத்தினர். உருண்டு வந்த பாறைகள் மலைப்பாதையில் இடையிலேயே நின்று விட்டது. மலையின் கீழே உள்ள விவசாயத் தோட்டத்திற்கு, குடியிருப்பு பகுதிக்கோ இதனால் எந்தவித பாதிப்பும் இல்லை என வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.