நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அண்ணாசாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 32 ஆண்டுகளுக்கு முன்பு பயின்ற மாணவர்கள், பயிற்றுவித்த ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
ராசிபுரம் அண்ணாசாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் அரசு பள்ளியில் கடந்த 1991-92-ம் கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்திருந்தனர். இதனை தொடர்ந்து அந்த ஆண்டின் 40 மாணவர்கள் ஒன்று கூடி தங்களின் பள்ளி நாட்களை நினைவு கூர்ந்து பலரும் பேசினர். ஒருவருக்கு ஒருவர் அன்புடன் கருத்துக்களை பறிமாறிக்கொண்டனர். தொடர்ந்து நடந்த கலந்துரையாடலில் மாணவ, மாணவிகள் தங்களின் பள்ளி பருவம், திருமண நிகழ்வு, குடும்ப வாழ்க்கை, குழந்தைகளின் வாழ்க்கை, உள்ளிட்ட பல்வேறு தொடர்பான அனுபவங்களை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து மகிழ்ச்சி அடைந்தனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் இருக்கும் அனுபவங்களை பேசினர். வெளிநாடுகளில் வசிப்பவர்கள் இதற்காக அங்கிருந்து வந்திருந்தனர். இவர்கள் அனைவரும் ஒரே சீருடையில் நிகழ்ச்சியில் பங்கேற்றனர் .தங்களுடைய இந்த வெற்றிக்கு ஆசிரியர்கள்தான் காரணம் என மாணவர்கள் பலரும் பெறுமையுடன் கூறினர்.இதில் அப்போது ஆசிரியர்களான இருந்த ஏ.ராமசாமி, எம்.குமரவேல், பி.வஜ்ரவேல், பி.சாமிநாதன், எஸ்.செல்வராஜன், குமாரசாமி, ஏ.ஆர்.துரைசாமி உள்ளிட்ட பலரும் இதில் பங்கேற்றனர். ஆசிரியர்கள் பலரும் மாணவர்களால் கெளரவிக்கப்பட்டு நினைவு பரிசளிக்கப்பட்டனர்.