Tuesday, December 24, 2024
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeமாவட்ட செய்திகள்ராசிபுரம் பேருந்து நிலையத்தை மாற்றியமைக்க வேண்டும்: ராசிபுரம் நகர மக்கள் வளர்ச்சி நலக்குழு நகராட்சியில் மனு

ராசிபுரம் பேருந்து நிலையத்தை மாற்றியமைக்க வேண்டும்: ராசிபுரம் நகர மக்கள் வளர்ச்சி நலக்குழு நகராட்சியில் மனு

ராசிபுரம் நகரின் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு பேருந்து நிலையத்தை மாற்றியமைக்க வேண்டும் என ராசிபுரம் நகர மக்கள் வளர்ச்சி நலக்குழு சார்பில் நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்த ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனர்.

ராசிபுரம் நகரில் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு பேருந்து நிலையத்தை மாற்றியமைக்க நகர்மன்றத்தால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கேற்றவாறு அணைப்பாளையம் பகுதியில் தனியாரிடம் சுமார் 7 ஏக்கர் நிலம் தானமாகப் பெறப்பட்டு அப்பகுதியில் பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதனிடையை அணைப்பாளையம் பகுதிக்கு பேருந்து நிலையத்தை மாற்றியமைக்க நகரில் பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனையடுத்து ராசிபுரம் பேருந்து நிலைய மீட்புக் கூட்டமைப்பு சார்பில் கடையடைப்பு போராட்டமும், மக்கள் நலக்குழு சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து ராசிபுரம் நகர மக்கள் வளர்ச்சி நலக்குழு என்ற அமைப்பின் சார்பில் நூற்றுக்கணக்காணோர் திரண்டு வந்து நகர போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

முன்னதாக பழைய பேருந்து நிலையம், கடைவீதி, பூக்கடை வீதி வழியாக ஊர்வலமாக வந்த ராசிபுரம் நகர மக்கள் வளர்ச்சி நலக்குழுவினர் நகராட்சி அலுவலகத்தில் சுகாதார அலுவலர் செல்வராஜூடம் (ஆணையாளர் பொறுப்பு) பேருந்து நிலையத்தை மாற்றம் செய்ய வேண்டும் என கேட்டு மனு அளித்தனர். நகர்மன்றக் கூட்டத்தில் பேருந்து நிலையம் இடமாற்றம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை ராசிபுரம் நகர மக்கள் வளர்ச்சி நலக்குழு வரவேற்கிறது. அவ்வாறு அமையும் புதிய பேருந்து நிலையம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியவாறு அமைந்தால் பொதுமக்களுக்கு வசதியாக இருக்கும். நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும். மேலும் வியாபாரத் தேவை, வெளியூர்களில் கல்வி பயிலும் மாணவ மாணவியர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இதில் திமுக வார்டு நிர்வாகிகள், நகர்மன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் என திரளான பெண்கள் உட்பட பலரும் பங்கேற்றனர்.

.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!