நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக பணியாற்றி வந்த டாக்டர் அனுராதா என்பவர் இடைத்தரகர்கள் மூலம் குழந்தைகளை விற்றதாக புகார் எழுந்ததை தொடர்ந்து கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இவருடன் இடைதரகர்களாக செயல்பட்ட இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். குழந்தை விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வந்த டாக்டர் அனுராதா கடந்த சில மாதங்களுக்கு முன் ஜாமீனில் வெளியே வந்தார். இந் நிலையில் திருவாரூர் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர் திலகம் தலைமையில் நிர்வாக அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்ட மருத்துவத்துறை அதிகாரிகள் திருச்செங்கோட்டில் சீல் வைக்கப்பட்ட டாக்டர் அனுராதாவுக்கு சொந்தமான மருத்துவமனைக்கு சென்று சீல் அகற்றி உள்ளே இருந்த ஆவணங்களை போலீஸார் முன்னிலையில் ஆய்வு செய்தனர். தொ டர்ந்து இது தொடர்பாக வழக்கு விசாரணை நடந்து வருகிறது.