நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகேயுள்ள சித்தளந்தூரில் காந்தி ஆஸ்ரமத்தின் கிளையான கதர் பவன் திறப்பு விழா நடைபெற்றது. இதில் காந்தி ஆஸ்ரமத்தின் தலைவர் க.சிதம்பரம், செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் கிளை மேலாளர் ஆர். இளமாறன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று குத்துவிளக்கேற்றி கிளையை திறந்து வைத்தார். வங்கி காசாளர் எம்.அசோக்குமார், ஆசிரம இணைச் செயலர் பி.குமாரவடிவேல், புதுப்பாளையம் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் கே.கணேசன் உள்ளிட்ட ஆசிரமத்தின் ஊழியர்கள் பலரும் இதில் பங்கேற்றனர்.
சித்தளந்தூரில் கதர் பவன் திறப்பு
RELATED ARTICLES