நாமக்கல் மாவட்ட காஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ள சாதிக்பாஷா மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
நாமக்கல் மாவட்ட காஜியாக தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள அவர் ஆட்சியரை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்நிகழ்ச்சியில் நாமக்கல் பேட்டை அஞ்சுமனே ஜாமியா பள்ளிவாசல் முத்தவல்லி தௌலத் கான், மாருதி நகர் பள்ளிவாசல்
முத்தவள்ளி நாசர் பாஷா உள்ளிட்ட பள்ளிவாசல் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.