பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக்கொலை செய்யப்பட்டதை கண்டித்து தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் ராசிபுரத்தில்செவ்வாய்க்கிழமை ஆர்பாட்டம் நடைபெற்றது. ராசிபுரம் பஸ் நிலையம் முன்பாக நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கட்சியின் கிழக்கு மாவட்டச் செயலாளர் வீர.வினோத் சேகுவேரா தலைமை வகித்தார்.
ஆர்பாட்டத்தில் கொலை சம்பத்துக்கு கண்டனம் தெரிவித்தும், கொலையில் தொடர்புடையவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யவும், வழக்கினை சிபிசிஐடி காவல் பிரிவுக்கு மாற்றம் செய்யக்கோரியும் கோஷமெழுப்பினர். மாநில இளம் புலிகள் அணி துணை செயலர் ம.அறிவுத்தமிழன், கட்சியின் தலைமை நி்லையச் செயலர் மா.முகிலரசன், தென் மண்டல அணி செயலர் திருவளவன், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட செயலர் தலித்பாலா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றியச் செயலர் கதிர்வேந்தன் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்று கொலைக்கு கண்டனம் தெரிவித்தும், கோரிக்கை வலியுறுத்தியும் பேசினர்.