இராசிபுரம் ரோட்டரி சங்கத்தின் 2024-25-ம் ஆண்டின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா ராசிபுரம் ரோட்டரி ஹாலில் நடைபெற்றது.
இச்சங்கத்தின் புதிய தலைவராக எம்.முருகானந்தன், செயலாளராக கே.ராமசாமி, பொருளாளராக பி.கே.ராஜா உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பதவியேற்பு விழாவில் சங்கத்தின் தலைவர் பி.சீனிவாசன் வரவேற்றுப் பேசினார். செயலர் ஆர்.ஆனந்தகுமார் ஆண்டறிக்கை வாசித்தார். இதனை தொடர்ந்து ரோட்டரி சங்கத்தின் தலைவராக எம்.முருகானந்தன் உள்ளிட்டோர் புதிய நிர்வாகிகளாகப் பதவியேற்றுக்கொண்டனர்.
விழாவில் ரோட்டரி மாவட்டத்தின் ஆளுநர் வி.சிவக்குமார், ராசி இன்டர்நேஷனல் பள்ளியின் தலைவர் எஸ்.சத்தியமூர்த்தி, மண்டல ஒருங்கிணைப்பாளர் என்.கந்தசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று புதிய நிர்வாகிகளை வாழ்த்திப் பேசினார். மண்டல உதவி ஆளுநர் கு.பாரதி புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து வைத்து, வாழ்த்திப் பேசினார். முன்னதாக விழாவில் போலியோ ஒழிப்பு நிதியாக ரூ.38500, இலவச தையல் பயிற்சி முடித்த 5 ஏழை பெண்களுக்கு ரூ.24000 மதிப்புள்ள தையல் எந்திரம், ஆத்மபூமி பணியாளர்கள் 7 பேருக்கு ரூ.15000 ஆயிரம் மதிப்பில் சீருடை, ராசிபுரம் நித்ய சுமங்கலி மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க ரூ.3500 மதிப்பில் விபூதி பாக்கெட், ஏழை மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை உள்ளிட்ட நல உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. சர்வதேச ரோட்டரி அறக்கட்டளைக்கு சங்க உறுப்பினர்களால் 1300 டாலர் நிதி அளிக்கப்பட்டது. மேலும் விழாவில் ரோட்டரி செயலி வெளியிடப்பட்டது. பதவியேற்பு விழாவில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றனர். பதவியேற்பு விழாவில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றனர்.