ராசிபுரம் வாசவி கிளப் – வாசவி கிளப் வனிதா சங்கங்களின் சார்பில் ஆளுநர் அலுவல் முறை வருகை விழா ராசிபுரம் வாசவி மஹாலில் 30.06.2024 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் சங்க ஆளுநர் எஸ்.சத்யநாராயணன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
வாசவி க்ளப்ஸ் இண்டர்நேஷனல் மாவட்டம் V501Aல் உள்ள சங்கங்களை சேர்ந்த அனைத்து உறுப்பினர்களின் பெயர் , முகவரி, அலைபேசி எண், தொழில், ரத்த வகை போன்ற தகவல்கள் அடங்கிய தகவல் பெட்டகமான சத்யா யுனிவர்ஸ் என்ற புத்தகம் மாவட்ட ஆளுநர் S.சத்யநாராயணன் வெளியிட வாசவி க்ளப் ராசிபுரம் தலைவர் V.சுரேஷ் பாலாஜி, வாசவி க்ளப் வனிதா தலைவர் T.சந்தியா ஆகிய இருவரும் பெற்றுக் கொண்டனர். கேபினட் செயலாளர் N.ரமேஷ் , கேபினட் பொருளாளர் .சுரேஷ் சத்யா யுனிவர்ஸ் ப்ராஜெக்ட் தலைவர் மற்றும் துணை ஆளுநர் A. வெங்கடேஸ்வர குப்தா, ரீஜன் தலைவர் N.சுப்ரிதா, மண்டல தலைவர் B.லட்சுமி பிரியா உள்ளிட்ட கிளப் நிர்வாகிகள் பலரும் விழாவில் பங்கேற்றனர்.