Monday, December 23, 2024
ADVERTISEMENT
ADVERTISEMENT
HomeUncategorizedநாமக்கல் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் (ITI) மாணவர்கள் சேரலாம் - ஆட்சியர் அறிவிப்பு

நாமக்கல் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் (ITI) மாணவர்கள் சேரலாம் – ஆட்சியர் அறிவிப்பு

நாமக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்ந்து மாணவர்கள் பயன்பெறலாம் என நாமக்கல் ஆட்சியர் ச.உமா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கும் நாமக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி, பிளஸ்1 மற்றும் பிளஸ்2 தேர்ச்சி / தோல்வி அல்லது ஏதாவது ஒரு டிகிரி / டிப்ளமோ பெற்ற மாணவர், மாணவியர்களுக்கான நேரடிச் சேர்க்கையானது 01.07.2024 முதல் 15.07.2024 வரை நடைபெற உள்ளது. 

நாமக்கல் அரசு ஐ.டி.ஐ-ல் இரண்டு ஆண்டு பயிற்சிகளான எலக்ட்ரீசியன் (Electrician), டிராப்ட்ஸ்மேன் (சிவில்) (Draughtsman Civil) மெஷினிஸ்ட் (Machinist) – (இருபாலர்) & ஓராண்டு பயிற்சியாக மெக்கானிக் ஆட்டோபாடிரிப்பேர் (இருபாலர்) போன்றவற்றிக்கும், பெண்களுக்கு மட்டும் ஓராண்டு பயிற்சியாக கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர்& புரோகிராமிங் அசிஸ்டென்ட்(C.O.P.A.) ஈராண்டு பயிற்சியாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணு சாதனங்கள் பராமரிப்பு (I.C.T.S.M.) பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

2023-ஆண்டில் புதிதாக துவங்கப்பட்டுள்ள Industry 4.0 திட்டத்தின் கீழ் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தொழிற்பிரிவுகளான (இருபாலர்)
Mechanic Electric Vehicle (கம்மியர் மின்சார வாகனம்) – இரு ஆண்டு, Industrial Robotics and Digital Manufacturing Technician (தொழிற்துறை ரோபோடிக்ஸ் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப உற்பத்தி வல்லுநர்கள்) –ஓராண்டு, Advanced CNC Machining Technician (மேம்பட்ட CNC இயந்திர தொழில்நுட்ப வல்லுநர்கள்) (இருபாலர்) – இரு ஆண்டு. போன்ற தொழிற்பிரிவுகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் பயிற்சி பெறும் பயிற்சியாளர்களுக்கு பயிற்சியின் போது OJT (On-The Job Training), Internship Training & Industrial Visit) வழங்கப்பட்டு வருகிறது. பயிற்சி முடிந்த பின் Campus Interview (வளாக நேர்காணல்) மூலமாக 100 சதம் வேலைவாய்ப்பு பெற்றுதரப்படும். இப்பயிற்சியின் பொழுதே, ஒவ்வொருவருக்கும் ரூ 50,000 மதிப்பில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்தால் கூடுதல் திறன் கொண்ட பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ/ மாணவியர்களுக்கு பயிற்சிக்காலத்தில் பயிற்சி கட்டணம் முற்றிலும் இலவசம் மாதம் ரூ.750/-உதவித்தொகையுடன் விலையில்லா மிதிவண்டி, பாடபுத்தகங்கள், சீருடை, காலணி, வரைபடக்கருவிகள் மற்றும் இலவச பஸ்பாஸ் ஆகியவை வழங்கப்படுகின்றன.
மேலும் 1-ம் வகுப்பு முதல் 10-ம்வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த பெண் பயிற்சியாளர்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் ரூ.1,000/-மாதந்தோறும் வழங்கப்படும் மற்றும் 1-ம் வகுப்பு முதல் 10-ம்வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த ஆண் பயிற்சியாளர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் ரூ.1,000/- மாதந்தோறும் வழங்கப்படும் 10-ஆம் வகுப்புடன் இரண்டாண்டு ஐ.டி.ஐ பயிற்சி முடித்தவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் 12ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்க பயிற்சி அளிக்கப்படுகிறது.

இப்பயிற்சிகளில் இறுதியில் மத்திய அரசால் தேசிய தொழிற்சான்று (என்டிசி) வழங்கப்பட்டு வருகிறது இந்த சான்று அகில இந்திய அளவிலும் மற்றும் மேலைநாடுகளில் வேலைவாய்ப்பு பெற வழிவகிக்கிறது. இந்த என்டிசி சான்று ஆனது அரசு பணிகளில் சேர குறிப்பாக போக்குவரத்து கழகங்களில் மற்றும் நெடுஞ்சாலைதுறை, ஐடிஐ-க்களில் ஆசிரியர்களாக நிரந்தர அரசுப்பணியாளர்களாக சேர தகுதியாக இருக்கும்.
இப்பயிற்சிகளில் சேர, முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற முறையில், நேரடியாக அரசு ஐ.டி.ஐ வந்து அன்றே பயிற்சியில் சேர்ந்துகொள்ளலாம். விண்ணப்பிக்க 10 –ம்வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (2021 ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் 10 ஆம் வகுப்பு முடித்திருப்பின் 9ஆம் வகுப்பு மதிப்பெண்சான்றிதழ்), மாற்றுச்சான்றிதழ் (TC), சாதிச்சான்றிதழ்(Community Certificate), ஆதார்அட்டை, நிரந்தர கைபேசி எண், eMail Id, Passport Photo – 5 Copy உள்ளிட்ட ஆவணங்கள் தேவை. மேலும் விவரங்களுக்கு 04286-29959, 04286-267876, 9499055844 என்ற தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு பிற விவரங்களை பெறலாம் என மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!