நாமக்கல் மாவட்ட வையப்பமலை ஸ்ரீவிநாயகா சிபிஎஸ்சி பள்ளியின் முதல்வர் எஸ்.சிதம்பரம் அவர்களுக்கு அகில இந்திய தனியார் பள்ளிகளின் முதல்வர்கள் சங்கத்தின் சார்பில் “சிறந்த முதன்மை விருது” வழங்கப்பட்டுள்ளது. சேலம் ஜிஆர்டி கிராண்ட் எஸ்டான்சியாவில் அண்மையில் நடைபெற்ற விழாவில் இதற்கான விருதினை நாகாலாந்து பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் ஜான், தனியார் பள்ளி முதல்வர்கள் சங்கத்தின் தலைவர் ராஜேந்திர பிரசாத் ஆகியோர் இதனை வழங்கினர். இதற்கான விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் கணேசன், டாக்டர் ராமசுப்ரமணியம் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். விருது பெற்ற எஸ்.சிதம்பரத்தை ஸ்ரீவிநாயகா பள்ளியின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பாராட்டி வாழ்த்தினர். ஏற்கனவே எஸ்.சிதம்பரம் 2008-ம் ஆண்டு EDUCLOUD அறக்கட்டளையின் முதன்மை விருதினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.