ராசிபுரம் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை சார்பில் மழை வெள்ளம் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடைமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செயல்விளக்கமளித்தனர்.
ராசிபுரம் கோனேரிப்பட்டி ஏரி அருகில் தாழ்வான குடியிருப்பு பகுதிக்கு சென்று பொதுமக்கள் முன்னிலையில் தென்மேற்கு பருவமழையின் போது, அதிக காற்று வீசும் போதும், எவ்வாறு குடியிருப்பு பகுதிகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவது, இடிமின்னல் இருக்கும் போது, கால்நடைகளுக்கான பாதுகாப்பு நடைமுறைகள் குறித்தும்,மழை வெள்ளத்தின் போது மேற்கொள்ளப்படவேண்டிய நடைமுறைகள் குறித்தும் செயல்விளக்கமளித்தனர். மேலும் அவசர காலங்களில் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினரை தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் குறித்தும் ராசிபுரம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் வெ .பலகார ராமசாமி தலைமையில், நிலைய அலுவலர் கு .ஏழுமலை உள்ளிட்டோர் விழஇப்புணர்வு செயல்விளக்கம் செய்து காண்பித்தனர்.