நாமக்கல் நகரில் ஜூஸ் பார்க் என்ற பெயரில் பரமத்தி சாலையில் தொடங்கப்பட்டுள்ள குளிர்பானம் மற்றும் ஃபாஸ்ட் புட் நிறுவனத்தின் திறப்பு விழா நடைபெற்றது.
திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், ஜூஸ் பார்க் நிலையத்தை திறந்து வைத்து, உரிமையாளர் எவரெஸ்ட் ராஜாவுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட செயலாளர் பொன்.வீரக்குமார், பொருளாளர் எஸ்.கே.சீனிவாசன், இணை செயலாளர் தேவி உதயகுமார், ஒருங்கிணைப்பாளர் சேந்தை கோபாலகிருஷ்ணன், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ராயல் பத்மநாபன், செய்தி தொடர்பாளர் ராகவன், செல்போன் சங்க மாவட்ட பொருளாளர் நிசி சுரேஷ், கணேஷ், வாசு சீனிவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.