கமலஹாசன் நற்பணி மன்றத்தின் 44 -வது ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை ராசிபுரத்தில் நடைபெற்றது. விழாவில் நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் ஜெ.ஜெயபிரகாஷ் தலைமை வகித்தார்.
இதில் மக்கள் நீதி மையத்தின் மாவட்ட பொருளாளர் எஸ்.மணி(எ) மாணிக்கவாசகம், மக்கள் நீதி மய்யத்தின் நம்மவர் தொழிற்சங்க பேரவையின் மாநில துணைச் செயலாளர் ஏ.ராஜு, ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கேக் வெட்டி நற்பணி மன்றத்தின் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு கேக் வழங்கினர். நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. மக்கள் நீதி மைய நிர்வாகிகள் பூபதி, ரமேஷ், ஜெ.சிவானந்தன், ராஜா, சங்கர், கெளதம், செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.