Monday, December 23, 2024
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeமாவட்ட செய்திகள்நாமக்கல்திருச்செங்கோட்டில் சர்வதேச ரத்தக்கொடையாளர் தினம்

திருச்செங்கோட்டில் சர்வதேச ரத்தக்கொடையாளர் தினம்

                                         
                                                  

நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை சார்பாக சரவதேச ரத்த கொடையாளர் தினத்தை தொடர்ந்து திருச்செங்கோடு பகுதியில் 40 முறைக்கு மேல் தொடர்ந்து ரத்ததானம் வழங்கிய ரத்தக் கொடையாளர்களுக்கு நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை அலுவலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. தொடர்ந்து ரத்ததான வழங்கி வரும் ரத்தக் கொடையாளர்களுக்கு நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளையின் தலைவர் PRD.பரந்தாமன் பரிசுப் பொருட்களை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் மோகனபானு கலந்து கொண்டு கொடையாளர்களின் சேவையை வாழ்த்திப் பேசினார். நிகழ்வில் நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளையின் நிறுவனர் சேன்யோ குமார், துணைத் தலைவர் மகேஷ் குமார், செயலாளர் சதீஷ்குமார், பொருளாளர் கணேஷ் குமார், இணை செயலாளர்கள் கலையரசி ஜெயக்குமார், கோகுல்ராஜ், வெங்கடாசலம், தினேஷ் குமார், மோகன்,ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!