திமுக சார்பில் முப்பெரும் விழா கோவை கொடிசியா மைதானத்தில் ஜூன்.15 மாலை 4 மணி அளவில் நடைபெறும் என நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா- நாற்பது நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றியளித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா – தேர்தல் வெற்றிக்கு கட்சியை வழிநடத்திச் சென்ற திமுக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சருக்கு பாராட்டு விழா என “முப்பெரும் விழா” வருகின்ற ஜூன் -15 ஆம் தேதி மாலை 4 மணியளவில் கோவையில் உள்ள கொடிசியா மைதானத்தில் நடைபெறுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சித்தலைவர்கள், வெற்றிபெற்ற நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ள உள்ளதால், நாமக்கல் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கிளை நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள் வாக்குச் சாவடி முகவர்கள், கட்சி உறுப்பினர்கள் என அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.