Monday, December 23, 2024
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeநடப்புகள்அரசு கையகப்படுத்திய விவசாய நிலத்துக்கு இழப்பீடு கேட்டு தாத்தா முதல் பேரன் வரை நீதிமன்ற போராட்டம்:...

அரசு கையகப்படுத்திய விவசாய நிலத்துக்கு இழப்பீடு கேட்டு தாத்தா முதல் பேரன் வரை நீதிமன்ற போராட்டம்: இழப்பீடு தர மறுக்கும் வருவாய்த்துறை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே விவசாய நிலத்தை அரசு கையகப்படுத்தியது தொடர்பாக இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டும், தாத்தா முதல் பேரன் வரை 30 ஆண்டுகள் போராடியும் வருவாய்த்துறை இழப்பீடு வழங்காமல் முரண்டுபிடித்து வருவது நிலம் இழத்தவர் குடும்பத்தை விரக்தியின் எல்லைக்கு கொண்டு சென்றுள்ளது. இதனால் இழப்பீடு வழங்காத வட்டாட்சியர் அலுவலகத்தின் பொருட்களை ஜப்தி் செய்ய வேண்டிய நிலைக்கு நீதிமன்றம் தள்ளப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள ஆர்.பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் காளியப்பகவுண்டர். இவருக்கு சொந்தமான அப்பகுதியில் உள்ள 2 ஏக்கர் விவசாய நிலத்தை ஆதிதிராவிடர் நலத்துறை கடந்த 1996-ம் ஆண்டு கையகப்படுத்தியது. இதனை ஆதி திராவிட ஏழை பயனாளிகளுக்கு வழங்குவதற்காக அரசு கையகப்படுத்தியுள்ளது. ஆனால் இதற்கு போதிய இழப்பீடு வழங்காத நிலையில், ராசிபுரம் நீதிமன்றத்தில் காளியப்பக்கவுண்டர் வழக்கு தொடுத்துள்ளார். இந்திலையில், கடந்த 2009 ம் ஆண்டு காளியப்பக்கவுண்டருக்கு ஆதி திராவிடர் நலத்துறை ரூ.2.20 லட்சம் தரவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் நீண்ட நாள் இழப்பீடு வழங்கப்படவில்லை. இதனால் காளியப்பக்கவுண்டர் நீதிமன்றத்தில் 2011-ல் மேல்முறையீடு செய்திருந்தார். இதற்கான வழக்கு ராசிபுரம் நீதி்மன்றத்தில் நடந்து வந்த நிலையில், காளியப்பக்கவுண்டருக்கு 80 வயது ஆனதால் தனது பேரன் பசுபதி என்பவர் பெயருக்கு அனைத்து உரிமைகளையும் மாற்றி உயில் எழுதிக் கொடுத்துவிட்டு 2019-ல் உயிரிழந்தார்.

இதனையடுத்து பேரன் பசுபதி தொடர்ந்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், ஆதி திராவிடர் நலத்துறை பசுபதிக்கு இழப்பீடு வட்டித்தொகையுடன் சேர்த்து ரூ.10 லட்சம் வழங்கிட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்த தொகையை வழங்காத நிலையில் வட்டாச்சியர் அலுவலகம் ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்திரவிட்டது. இதன்படி நீதிமன்ற ஊழியர்கள் வட்டாட்சியர் அலுவலத்தில் உள்ள அரசு ஜீப், கணினி, டேபிள், சேர், பீரோ, ஆகியவைகளை பறிமுதல் செய்து வாகனத்தில் ஏற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையை வருவாய்த்துறை அலுவலர்கள் நீதிமன்ற ஊழியர்களிடம் விரைவில் இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன்பேரில் ஜப்தியை கைவிட்டு வழக்கறிஞர்களும், நீதிமன்ற ஊழியர்களும் திரும்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!