திருச்செங்கோடு காந்தி ஆஸ்ரமம் தலைவராக ராசிபுரம் அருகேயுள்ள மசக்காளிப்பட்டி சுதந்திர போராட்ட தியாகி என்.கந்தசாமி கல்வி அறக்கட்டளைத் தலைவரான க.சிதம்பரம் புதியதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திருச்செங்கோடு புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள காந்தி ஆஸ்ரமம் 1925-ம் ஆண்டு மூதறிஞர் ராஜாஜியால் கிாரமப்பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில் உருவாக்கப்பட்டது. இதனை ஈ.வெ.ராமசாமி நாயக்கர் திறந்து வைத்துள்ளார். இங்கு மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, பாபு ராஜேந்திர பிரசாத், வல்லபபாய் படேல், காமராஜர் போன்ற பல தலைவர்கள் இந்த ஆஸ்ரமத்துக்கு வருகை தந்துள்ளனர். கிராமப்பொருளாதாரம், விவசாயம் சார்ந்து இங்கு பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த ஆஸ்ரமத்தின் புதிய தலைவராக க.சிதம்பரம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். புதிய தலைவர் பொறுப்பேற்பு விழா காந்தி ஆஸ்ரமம் வளாகத்தில் ஜூன்.10-ல் நடைபெறுகிறது. இதில் ஆஸ்ரமம் நிர்வாகிகள் பலரும் பங்கேற்கின்றனர். புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள க.சிதம்பரம், தியாகி என்.கந்தசாமி கல்வி அறக்கட்டளையின் கீழ் செயல்படும் கஸ்தூரிபா காந்தி கல்வி நிறுவனங்களின் தலைவராகவும் உள்ளார்.