நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள காக்காவேரி முத்தாயம்மாள் நீட் அகாடமியில் ரிபீட்டர்ஸ் மாணவர்களுக்கான பிரத்யேக பயிற்சி வகுப்புகள் ஜூன்.10-ல் தொடங்கும் என முத்தாயம்மாள் கல்வி அறக்கட்டளைத் தலைவர் ஆர்.பிரேம்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: சென்னை முத்தாயம்மாள் கல்வி அறக்கட்டளையால் 1984-ம் கல்வியாண்டில் தொடங்கப்பட்ட முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரி ஆகும். ராசிபுரம் பகுதியில் 40 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று இக்கல்லூரி கடந்த 24 ஆண்டுகளாக பாலிடெக்னிக் தொழில்நுட்பத் தேர்வில் தொடர்ந்து மாநில அளவில் முதல் இடத்தையும் பெற்று வருகிறது.
கிராமப்புற இளைஞர்களுக்கு நல்ல ஒழுக்கத்துடன் கூடிய தொழில்நுட்ப அறிவை போதிக்கிறது. தற்போது நடப்பு கல்வியாண்டில் கிராமப்புற மாணவர்களும் மருத்துவத்துறையில் பயில வாய்ப்பு வழங்கிட முத்தாயம்மாள் அகாடமி ஆஃப் எக்ஸலன்ஸ் என்னும் நீட் பயிற்சி அகாடமி தொடங்கப்பட உள்ளது. இந்த பயிற்சி வகுப்பில், இருபது ஆண்டுகள் அனுபவம் பெற்ற ஆசிரியர்களை கொண்டு நடத்தப்பட உள்ளது. அனைத்து வழி தடத்திலும் பேருந்து வசதி மற்றும்ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனி விடுதி வசதி உள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் மாணவர்கள் நீட் தேர்வில் 100 சதவீதம் வெற்றிபெற்று அதிக மதிப்பெண்களை பெற முடியும்.
மேலும் 2024 நீட் தேர்வில், 300-350 மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு 20 சதம் கட்டண சலுகையும், 350-400 மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு 25 சதம் கட்டண சலுகையும், 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு 30 சதம் கட்டண சலுகையும், பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் (தாவரவியல்+விலங்கியல்) பாடங்களில் 95 சதம் மேல் பெற்ற மாணவர்களு க்கு 50 சதம் கட்டண சலுகையும் , 90 முதல் 94 சதம் வரை மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு 30 சதம் கட்டண சலுகையும், 85 முதல் 89 சதம் வரை மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு 10 சதம் கட்டண சலுகையும் வழங்கப்படும். இப்பயிற்சி வகுப்பு வரும் ஜுன் 10-ஆம் தேதி முதல் முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் தொடங்கப்பட உள்ளது. சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் விபரங்களுக்கு 96777 70837, 95006 43337 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் ஆர்.பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.