Monday, December 23, 2024
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeகல்விச்சோலைஅகில இந்திய அளவில் முதலிடம் பெற்ற நாமக்கல் கிரீன் பார்க் நீட் பயிற்சி மைய மாணவர்கள்

அகில இந்திய அளவில் முதலிடம் பெற்ற நாமக்கல் கிரீன் பார்க் நீட் பயிற்சி மைய மாணவர்கள்

நாமக்கல் கிரீன்பார்க் பயிற்சி மையத்தின் மாணவர்கள் பலர் அகில இந்தி்ய அளவில் முதலிடம் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். நாமக்கல் கிரீன்பார்க் நீட் தேர்வு பயிற்சி மையம் அகில இந்திய அளவில் மருத்துவ மாணவர்களை உருவாக்குவதில் புகழ்பெற்றுள்ளது. இப்பயிற்சி மையத்தின் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி பிற மாநில மாணவர்களும் பயிற்சி பெற்று வருகின்றனர்.

தற்போது வெளியாக எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவில் இப்பள்ளி மாணவர்கள் ரஜனீஸ், ரோஹித், சபரீசன், ஜெயதிபூர்வஜா ஆகியோர் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளனர்.

இதே மையத்தில் பயின்ற நிதீஸ், ரித்திக் சரண், விக்னேஸ் ஆகிய மூவர் 720-க்கு 715 மதிப்பெண் பெற்று மையத்தில் 2-வதாக தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் ஹித்தேஸ் மோகன், மிதுன்ராஜ், பவன்குமார், சங்க மிதுன் ஆகிய நால்வர் 720-க்கு 710 மதிப்பெண்களுடன் மையத்தில் மூன்றாமிடம் பெற்றுள்ளனர். இம்மையத்தில் 720-க்கு 700 மதிப்பெண்கள் 49 மாணவர்கள் பெற்று சாதனை புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மையத்தில் பயின்று சாதனை பிரிந்து மாணவர்களை கிரீன்பார்க் பயிற்சி மையத்தின் தலைவர் சரவணன் உள்ளிட்ட இயக்குனர்கள், பயிற்சியாளர்கள் பாராட்டுத்தெரிவித்தனர். இந்த சாதனைக்கு பயிற்சியாளர்களின் அயராத உழைப்பும், அதற்கேற்ற மாணவர்களின் ஒத்துழைப்புமே காரணம் என்றார் பள்ளியின் தலைவர் கிரீன்பார்க் சரவணன்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!