ராசிபுரம் அருகேயுள்ள தனியார் ஹோமியோபதி மருத்துவக்கல்லூரியின் விடுதியில் தங்கி பயின்று வந்த மாணவ மாணவியர்கள் 10 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அடுத்துள்ள மேட்டுக்காடு பகுதியில் தனியார் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் அங்கு உள்ள விடுதியில் தங்கி பயலும் மாணவ மாணவியர் கள் வியாழக்கிழமை இரவு உணவருந்திய நிலையில் 10 பேருக்கு மட்டும் திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் கல்லூரி நிர்வாகத்தினர் மாணவ மாணவியர்களை மீட்டு சிகிச்சைக்காக ராசிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் மாணவ மாணவியர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் நிலையில் சம்பவம் தொடர்பாக உணவு பாதுகாப்பு துறையினர், சுகாதாரக் குழுவினர் கல்லூரியில் விசாரணை மேற்கொண்டனர். தற்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவ மாணவிகளின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கிசிச்சைக்கு பின் வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பாதிக்கப்பட்ட மாணவர்கள் கடைகளில் வாங்கிய உணவை அருந்தினார்களா அல்லது விடுதி உணவு அருந்தியதால் வாந்தி மயக்கம் ஏற்பட்டதா என விசாரணை செய்து வருகின்றனர்.