Monday, December 23, 2024
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeநடப்புகள்சைபர் கிரைம் குற்றம் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்: நாமக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

சைபர் கிரைம் குற்றம் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்: நாமக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

சைப்ர் கிரைம் கட்டமில்லா தொலைபேசி எண்-1930

கல்வி உதவித்தொகை மோசடி, முதலீடு மோசடி, மிரட்டல் கால் மோசடி, போதை பொருள் மிரட்டி மோசடி போன்ற சைபர் குற்றங்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ராஜேஸ்கண்ணன் தெரிவித்துள்ளார்.

உதவித் தொகை மோசடி:

உங்களை செல்போனில் தொடாபு கொண்டு கல்வி துறையில் இருந்து பேசுவதாகக் கூறி உங்களுடைய மகன், மகள் படிக்கும் பள்ளி பெயரை சொல்லி உதவித்தொகை வழங்குவதாக சொல்லி உங்களது வங்கி விவரங்களை கேட்டால் கொடுத்து ஏமாற கூடாது. உங்களது வங்கி கணக்கிற்கு கல்வி உதவித்தொகை பணம் வரும் என்று கூறுவதை நம்பி ஏமாற வேண்டாம்.

முதலீடு மோசடி :

உங்கள் பகுதியில் உள்ள தெரிந்த நபர்கள் (அ) உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பிரபல நிறுவனங்களின் பெயரில் உள்ள போலியான செல்போன் செயலிகளை அறிமுகப்படுத்தி அதில் முதலீடு செய்தால் தினமும் வருமானம் வரும் மற்றும் அதிக லாபம் பெறலாம் எனக் கூறி பணம் முதலீடு செய்ய சொல்லி பரிந்துரை செய்தால் அதை நம்பி பணம் முதலீடு செய்து ஏமாற வேண்டாம்.

மிரட்டல் கால் மோசடி:

உங்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பள்ளி, கல்லூரியில் படிக்கும் உங்கள் மகன, மகளை போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்வதாகவோ அல்லது கடத்திவிட்டதாகவோ கூறி உடனே பணம் அனுப்ப வேண்டும் என்று கூறினால், உங்களது மகன், மகளை உடனே தொடர்பு கொண்டு அவர்கள் பாதுகாப்பாக
இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். பணம் ஏதும் அனுப்பி ஏமாற வேண்டாம்.

போலி போதைபொருள் பார்சல் மோசடி:

செல்போனிலோ (அ) வாட்ஸ் ஆப் கால் மூலமாகவோ உங்களை தொடர்பு கொள்ளும் அடையாளம் தெரியாத நபர்கள் தாங்கள் மும்பை மற்றும் டெல்லி காவல்துறை அதிகாரிகள் என்றோ அல்லது சிபிஐ அதிகாரிகள் என்றோ அறிமுகப்படுத்திக் கொண்டு உங்கள் பெயர், ஆதார் எண், செல்போன் எண்ணை பயன்படுத்தி தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பார்சலில் அனுப்பப்பட்டுள்ளதாகவோ அல்லது உங்களது வங்கி கணக்கில் முறைகேடாக பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாகவோ கூறி ஸ்கைப் போன்ற வாய்ஸ் கால் மூலம் விசாரணை செய்ய வேண்டும் என்று கூறி மிரட்டி உங்களுடைய தனிப்பட்ட விவரங்கள் மற்றும் வங்கி கணக்கு விபரங்களை கேட்டால் கொடுத்து ஏமாற கூடாது. பணம் கேட்டு மிரட்டினாலும் கொடுத்து ஏமாற கூடாது. உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தை தொடர;பு கொள்ளவும்.

பொதுமக்கள் சைபர் க்ரைம் குற்றங்களால் பாதிக்கப்பட்டால் உடனடியாக 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அழைக்கவும் அல்லது www.cybercrime.gov.in இணையதளத்தில் புகாரை பதிவு செய்ய வேண்டும் என நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ராஜேஷ்கண்ணன், தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!