நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டம் வளையப்பட்டி என்.புதுப்பட்டி அரூர் பரளி சுற்று பகுதிகளில் சிப்காட் திட்டம் கொண்டு வருவதை ரத்து செய்ய வலியுறுத்தியும் இப்பகுதியில் நீர் ஆதாரங்கள் நீரோடைகள் ஏரி குளம் குட்டைகள் மேய்ச்சல் தரை நிலங்கள் மற்றும் மான் உள்ளிட்ட வனவிலங்குகளின் வசிப்பிடங்கள் வரைபடத்தில் மறைக்கப்பட்டுள்ளதை மாற்றி உண்மையான தகவல்களை பதிவு செய்ய வேண்டியும் 19 வது நாள் தொடர் காத்திருப்பு போராட்டம் ஸ்ரீ கஸ்தூரி ரங்கநாதர் பெருமாள் கோவில் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
இது சம்பந்தமாக வருகின்ற 1.6.2024 சனிக்கிழமை காலை 10 மணி அளவில் நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களிடம் மனு அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்வில் விவசாய முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் கே. பாலசுப்பிரமணியன் அரசியல் உயர்மட்ட தலைவர் இராமசாமி மகளிரணி பொறுப்பாளர் பாப்பாத்தி கம்யூனிஸ்ட் கட்சியின் பொறுப்பாளர் ரவீந்திரன் சிப்காட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் கி.ராம்குமார் N.சரவணன் Kபழனிவேல் தண்டபாணி மற்றும் ஸ்ரீ கஸ்தூரி ரங்கநாதர் ஆலய நிர்வாக குழு தலைவர் சின்னத்தம்பி, நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் கஸ்தூரி ரங்கநாதர் ஆலய பாதுகாப்பு பேரவை அமைப்பது சம்பந்தமாக நிர்வாக குழுவினரிடம் ஆலோசிக்கப்பட்டது. இதில் பொதுமக்கள் விவசாயிகள் விவசாய தொழிலாளர்கள் அனைத்து கட்சி நிர்வாகிகள் சமூக ஆர்வலர்கள் மற்றும் பெருமாள் பக்த கோடிகள் கலந்து கொண்டனர்.