Tuesday, December 24, 2024
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeநடப்புகள்திருப்பூர் - கோவை மாவட்ட நவசமாஜ் அமைப்பின் தொடக்க விழா

திருப்பூர் – கோவை மாவட்ட நவசமாஜ் அமைப்பின் தொடக்க விழா

புதுடெல்லியில் பதிவு பெற்ற நவசமாஜ் அமைப்பு தமிழகம் முழுவதும் அமைப்பு தொடங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர்-கோவை மாவட்டங்களில் இதற்கான கிளை தொடக்க விழா நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் நடைபெற்ற இதற்கான விழாவில் மாநிலத் தலைவர் முனைவர் மா. அன்பானந்தம் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்து கெளரவிக்கப்பட்டனர். பின்னர், கோவை, திருப்பூர் மாவட்ட நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், தமிழக அரசு மருத்துவர் குல சமுதாய மக்களுக்கு அரசு வேலை வாய்ப்பு மற்றும் கல்விபயில சிறப்பு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநில பொருளாளர் முனைவர் சேகர் பாபு, மாநில பொதுச் செயலாளர் பி. சி. பண்வார், அமைப்புச் செயலாளர் பாலச்சந்தர். மாநில இணைச் செயலாளர் மு. மதிவாணன், சென்னை மாவட்டத் தலைவர் முருகன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் தேனி சரவணன். டி.கே.தண்டபாணி. மாவட்ட தலைவர்கள் நாமக்கல் சிவராஜ், கரூர் விஜயன், செயலாளர் திருமூலர், திண்டுக்கல் மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ஈரோடு மாவட்ட தலைவர் அன்பழகன், தர்மபுரி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதனையடுத்து பிற்பகல் புதுச்சேரி டாக்டர் புகழேந்தி மற்றும் வர்மக்கலை மருத்துவர் திருச்சி கிஷோர் ஆகியோரால் சித்த மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளானமானோர் இதில் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!