ராசிபுரம் பிள்ளாநல்லூர் பகுதியில் ராமலிங்க சுவாமி வளாகத்தில் சித்திரம் பவுண்டேஷன் சேலம் வாசன் கண் மருத்துவமனை, மணிப்பால் மருத்துவமனை சார்பில் இலவச கண், பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேரூராட்சி தலைவர். A. சுப்ரமணியம், வார்டு கவுன்சிலர் கே.சி. தியாகராஜன், வழக்கறிஞர் கண்ணன், திமுக தகவல் தொழில்நுட்ப அணி V. ஜனார்த்தனன், சித்திரம் பவுண்டேஷன் நிர்வாகிகள் ராஜேஷ், கார்த்தி கலந்து கொண்டனர்.
மேலும் பொது மக்களுக்கு முகாமில் பொது மருத்துவ ஆலோசனை, கண் பரிசோதனை செய்து சிகிச்சைக்கான ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் திரளானோர் பங்கேற்று ஆலோசனை பெற்றனர்.