Monday, December 23, 2024
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeநடப்புகள்ராசிபுரம் தமிழ்க் கழகம் சார்பில் முதல் கூடுகை

ராசிபுரம் தமிழ்க் கழகம் சார்பில் முதல் கூடுகை

ராசிபுரம் தமிழக் கழகம் சார்பில் முதல் கூடுகை மற்றும் அரசுப் பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் முதலிடம் பெற்ற அரசுப் பள்ளிகளின் மாணவ மாணவியர்களுக்கு பரிசளிப்பு விழா 24.5.24 அன்று நடைபெற்றது. ராசிபுரம் சுத்த சன்மார்க்க சங்க அரங்கில் நடைபெற்ற விழாவில் ராசிபுரம் தமிழ்க் கழக நிறுவனர் பி.தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். பள்ளிகளின் துணை ஆய்வாளரும், தமிழ்க்கழக செயலாளருமான கை.பெரியசாமி வரவேற்றுப் பேசினார்.

வள்ளலார் சுத்த சன்மார்க்கச் சங்கத் தலைவர் கே.எம்.நடேசன், நல்லாசிரியர் பெ.செளந்திரராஜன், நாமக்கல் தமிழ்ச் சங்கச் செயலர் கோபாலநாராயணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராசிபுரம் திருவள்ளுவர் அரசுக் கல்லூரி இணைப்பேராசிரியர் க.செல்வராசு, தமிழ்ச் சங்கப் பேராசிரியர் சி.ரத்தினம், ஒ.செளதாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் சு.குமரன், மக்கள் தன்னுரிமைக் கட்சியின் நிறுவனர் நல்வினைச் செல்வன், நாமக்கல் பள்ளித் துணைஆய்வாளர் சு.கிருஷ்ணமூர்த்தி, வழக்குரைஞர் ப.சின்னுசாமி, தமிழ்க் கழக துணைச்செயலர் மா.இருசப்பன், இரா.தினேஷ் உள்ளிட்டோர் பங்கேற்று விழாவில் பேசினர். இவ்விழாவில் தருமபுரி கம்பன் கழகச் செயலாளர் தகடூர் ப.அறிவொளி தமிழ் எங்கள் உயிருக்கு நேர், செ.அ.மொய்குழலி அறம் வளர்த்த தமிழ் என்றத் தலைப்பிலும் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றுப் பேசினர்.

விழாவில் 10, 12-ம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் முதலிடம் பெற்ற அரசுப் பள்ளிகளின் மாணவ மாணவியர்களுக்கு பரிசளித்து கெளரவிக்கப்பட்டனர். மேலும் யோகா பயிற்சி, பரதநாட்டியம், பேச்சாளர்களின் பேச்சரங்கம், கழிவறை சுத்தம் செய்யும் பெண்களுக்கு உடை வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. முடிவில் ராசிபுரம் தமிழ்க் கழகப் பொருளாளர் வீ.ரீகன் நன்றி கூறினார்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!