நாமக்கல் மாவட்ட பள்ளி மாணவ மாணவியர்கள் பயன்பெறும் வகையில் கல்வி பயிலும் பள்ளிகளிலேயே வருமான, இருப்பிட, சாதி மற்றும் முதல் பட்டதாரி சான்றுகளை விண்ணப்பிக்க ஏதுவாக பள்ளிகளில் 24.05.2024 அன்று காலை 10 மணி முதல் 2 மணி வரை இ-சேவை மையம் ஏற்படுத்தப்பட்டு செயல்படும்.
முகாம் செயல்படும் பள்ளிகள் விவரம்:
- அரசு மேல்நிலைப்பள்ளி, பழையபாளையம், சேந்தமங்கலம் வட்டம்
- அரசு மேல்நிலைப்பள்ளி, நாமக்கல்(வடக்கு), நாமக்கல் வட்டம்
- அரசு மேல்நிலைப்பள்ளி, கோனூர், நாமக்கல் வட்டம்.
- அரசு மேல்நிலைப்பள்ளி, என். புதுப்பட்டி, மோகனூர் வட்டம்.
- அரசு மேல்நிலைப்பள்ளி, சோளசிராமணி, பரமத்திவேலூர்வட்டம்.
- அரசு மேல்நிலைப்பள்ளி, எஸ்.எஸ். சாலை, இராசிபுரம்.
- அரசு மேல்நிலைப்பள்ளி, சிங்களாந்தபுரம், இராசிபுரம் வட்டம்
- அரசு மேல்நிலைப்பள்ளி, சித்தாளந்தூர், திருச்செங்கோடு வட்டம்.
- அரசு மேல்நிலைப்பள்ளி, பள்ளிபாளையம், குமாரபாளையம் வட்டம்.
- அரசு மேல்நிலைப்பள்ளி, தண்ணீர்பந்தல்பாளையம், திருச்செங்கோடு வட்டம்.
- அரசு மேல்நிலைப்பள்ளி, காவக்காரன்பட்டி, சேந்தமங்கலம் வட்டம்.
மேற்கண்ட சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்க வரும்பொழுது மாணவர்கள் பின்வரும் ஆவணங்களை அசலாக கொண்டு வர வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வரும்பொழுது அவர்களுடன் கைப்பேசியையும் உடன் எடுத்து வர வேண்டும்.
வருமானச்சான்றிதழ் பெறுவதற்கு பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வருமானத்திற்கான ஆதாரம்(ஏதேனும்இருந்தால்), சாதிச்சான்றிதழ் பெறுவதற்கு பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பெற்றோர் அல்லது உடன்பிறந்தோர் சாதிச்சான்று அல்லது விண்ணப்பதாரர்களது மாற்றுச்சான்றிதழ், பிறப்பிடச்சான்றிதழ் பெறுவதற்கு பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பிறப்புச்சான்று(இருந்தால்), முதல் பட்டதாரி சான்று பெறுவதற்கு பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை விண்ணப்பதாரர் 12 ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ் மற்றும் அனைத்து குடும்ப உறுப்பினர்களது கூட்டு உறுதி மொழி படிவம், பெற்றோர்களது சுய உறுதி மொழி படிவம், விண்ணப்பதாரர்கள் உடன்பிறந்தோரது பள்ளி அடையாள அட்டை (பள்ளியில் படித்துக்கொண்டிருந்தால்), உடன்பிறந்தோரது கல்லூரி போனஃபைட் சான்று (கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தால்) ஆவணங்களை முகாமிற்கு கொண்டு வந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், மேற்படி முகாம் நடைபெறும் இடங்களில் அருகில் வசிக்கும் மாணவ, மாணவியர்கள் மேற்படி இ-சேவை மையங்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, தெரிவித்துள்ளார்கள்.