நாமக்கல் பிஜிபி வேளாண் கல்லூரி மாணவியர்கள் ராசிபுரம் வட்டாரப் பகுதியில் வேளாண் படிப்பின் ஒரு பகுதியாக 60 நாட்கள் நடைபெறும் வயல் வெளி பயிற்சி முகாமில் பங்கேற்று பயிற்சி பெற்று வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கல்லூரி மாணவியர்கள் ராசிபுரம் வட்டாரம் கூனவேலம்பட்டி கிராமத்தில் உயிர் உரங்களைப் பற்றிய விழிப்புணர்வு விவசாயிகளிடம் ஏற்படுத்தினர். வட்டார வேளாண்மை அலுவலர் சுதாகர், வேளாண்மை உதவி அலுவலர் ஸ்ரீகாந்த் தலைமையில் விவசாயிகளுக்கு இப்பயிற்சி அளிக்கப்பட்டது. உயிர் உரங்களை மூன்று வகையாகப் பயன்படுத்தலாம் விதை நேர்த்தி செய்தல் நேரடியாக மண்ணில் கலந்து உரமிடுதல் மற்றும் பாசன நீரில் கலந்து உரமிடுதல். இந்த உயிர் உரங்கள் பல்வேறு நுண்ணுயிரிகளைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. பாஸ்போ பாக்டீரியா என்ற உயிர் உரத்தை ஒரு கிலோ விதைக்கு 10 மில்லி என்ற அளவில் எடுத்து தேவையான அளவு நீர் கலந்து முப்பது நிமிடம் ஊற வைத்த பின் 24 மணி நேரம் ஊற வைத்து பயிரிட வேண்டும். இதன் மூலம் விதை நன்றாக முளைத்து வளருவது டன் பூஞ்சை நோய்களும் பயிருக்கு வராது என்று விவசாயிகளுக்கு மாணவியர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர்.
விவசாயிகளுக்கு உயிர் உரங்களைப் பற்றிய விழிப்புணர்வு
RELATED ARTICLES