Monday, December 23, 2024
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeதகவல்கள்தென்னையைத் தாக்கும் காண்டாமிருக வண்டைக் கட்டுப்படுத்தும் முறைகள்

தென்னையைத் தாக்கும் காண்டாமிருக வண்டைக் கட்டுப்படுத்தும் முறைகள்

ராசிபுரம் சுற்று வட்டாரப் பகுதியில் தென்னையை தாக்கும் காண்டாமிருக வண்டை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து வேளாண் கல்லூரி மாணவியர்கள் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நாமக்கல் பி.ஜி.பி வேளாண் கல்லூரி மாணவியர் ராசிபுரம் வட்டார‌ பகுதியில் வேளாண் ‌படிப்பின்‌ ஒரு பகுதியாக 60 நாட்கள் ‌நடைபெறும் வயல் வெளி‌ பயிற்சி முகாமில் பங்கேற்று பயிற்சி பெற்று வருகின்றனர். இதனையடுத்து ராசிபுரம் வட்டாரம் கூனவேலம்பட்டி கிராமத்தில் தென்னையைத் தாக்கும் காண்டாமிருக வண்டைக் கட்டுப்படுத்தும் பக்கெட் பொறி விழிப்புணர்வு பற்றி விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.

இதனை கட்டுப்படுத்திட பக்கெட் பொறியில் தயிர்‌ மற்றும் ‌விளக்கெண்ணெய்‌ ஊற்றி நன்கு கலக்க வேண்டும். பின் பக்கெட் பொறியை தென்னை மட்டையின் நடுவில் கட்டி‌ விட வேண்டும். இரண்டு மூன்று நாட்களில் வண்டுகள் பக்கெட் பொறியில் விழுந்து விடும் பின் அதனை எடுத்து எரித்து ‌விடவேண்டும் என்பதை மாணவியர் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர். இது மட்டுமல்லாமல் காண்டாமிருக வண்டின் ‌தாக்கத்தின்‌ அறிகுறி பற்றியும் பக்கெட் பொறி எளிய முறையில் செய்வது எப்படி என்றும் விவசாயிகளுக்கு மாணவியர் செயல் விளக்கமாக செய்து காட்டினர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!