நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஸ்ரீவித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர் 10-வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்துள்ளனர். ராசிபுரம் பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றி வரும் விக்னேஸ்வரமூர்த்தி, சந்தான லட்சுமி ஆகியோரின் மகள் வி.ஹரிதர்ஷினி.
ராசிபுரம் ஸ்ரீவித்யா மந்திரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து தேர்வு எழுதினார். வெள்ளிக்கிழமை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாணவி ஹரிதர்ஷினி 498 மதிப்பெண்களுடன் சிறப்பிடம் பெற்றுள்ளார். பாடவாரியாக இவர் பெற்ற மதிப்பெண்கள்: தமிழ்- 99, ஆங்கிலம்- 99, கணிதம்-100, அறிவியல் -100, சமூக அறிவியல்- 100.
இதேபோல், இப்பள்ளி மாணவி பி.பவதன்யா 496 மதிப்பெண்களும், மாணவி ஏ.எஸ்.சுபிக்ஷா 489 மதிப்பெண்களும் பெற்றார். பள்ளியில் தேர்வு எழுதிய 101 மாணவ மாணவியர்களில் 450-க்கும் மேல் 29 பேரும், 400-க்கும் மேல் 68 பேரும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கணிதபாடத்தில் 19 பேரும், அறிவியல் பாடத்தில் 2 பேரும், சமூக அறிவியலில் 5 பேரும் 100-க்கு 100 மதிபெண்கள் பெற்றனர்.