Monday, December 23, 2024
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeநடப்புகள்ராசிபுரம் வடுகம் பகுதியில் குடிநீர் இணைப்பு வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து மறியலில் ஈடுபட்ட பாஜகவினர்

ராசிபுரம் வடுகம் பகுதியில் குடிநீர் இணைப்பு வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து மறியலில் ஈடுபட்ட பாஜகவினர்

ராசிபுரம் அருகேயுள்ள வடுகம் ஊராட்சி பகுதியில் பொதுமக்களின் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பாஜகவினர் புதன்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள வடுகம் ஜி.ஆர் நகர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள 25 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு நீண்டநாட்களாக கேட்டும் வழங்கப்படவில்லையாம். குடியிருப்புகள் முறையான அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளதால் குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பே குடியிருப்புகளுக்கு முறையான அனுமதி பெறப்பட்டுள்ளது. இதன் பின்னர் குடிநீருக்கு விண்ணப்பத்தும் குடிநீர் வழங்கப்படவில்லை என புகார் கூறுகின்றனர். இதனையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் பல வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் குடிநீர் வினியோகம் வழங்கப்படவில்லை. இது குறித்து ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் போன்ற இடங்களில் முறையிட்டும் பலனில்லை. இந்நிலையில், இணைப்பு பெற்ற வீடுகளுக்கு குடிநீரும், விண்ணப்பித்தவர்களுக்கு குடிநீர் இணைப்பும் வழங்காத கண்டித்து நாமக்கல் மாவட்ட பாஜக தலைவர் என்.பி.சத்தியமூர்த்தி தலைமையில் வடுகம் பகுதியில் பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதித்தது. இதனையடுத்து சம்பவ இடம் வந்த நாமகிரிப்பேட்டை காவல்துறையினர் பாஜகவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக குடிநீரும், புதிய இணைப்புகளும் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னர் பாஜகவினர் மறியலை கைவிட்டனர். மறியல் போராட்டத்தில் பாஜக நிர்வாகிகள் லோகேந்திரன், ஹரிஹரன், வடிவேல், தமிழரசு உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!