Monday, December 23, 2024
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeநடப்புகள்ராசிபுரம் ஜாமியா மஸ்ஜித் இஸ்லாமியர்கள் சார்பில் ஈத்கா மைதானத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை

ராசிபுரம் ஜாமியா மஸ்ஜித் இஸ்லாமியர்கள் சார்பில் ஈத்கா மைதானத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை

ரம்ஜான் பண்டிகையையொட்டி, ராசிபுரம் பெரிய பள்ளி வாசல் ஜாமியா மஸ்ஜித் இஸ்லாமியர்கள் ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

ரம்ஜான் பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பிருந்து தொழுகையில் ஈடுபடுவது வழக்கம். நடப்பாண்டு தொடர் நோன்புக்கு பிறை தென்பட்டதையடுத்து இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.

ராசிபுரம் பெரிய பள்ளி வாசல் ஜாமியா மஸ்ஜித் அருகே நடந்த ரம்ஜான் சிறப்பு தொழுகையில் 1000க்கும் மேற்ப்பட்ட இஸ்லாமிய பெருமக்கள் பங்கேற்று, தங்கள் ஈதல் திருநாளிலில் பெருநாள் திடல் தொழுகையில் ஈடுபட்டனர். இந்த சிறப்பு தொழுகையில் மக்கள் அனைவரும் நலமாக வாழ வேண்டியும், வெயில் தாக்கம் குறைய வேண்டியும், நல்ல மழை பொழிவு, மற்றும் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடன் வாழ இந்த சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர்கள் வேண்டிக் கொண்டு தொழுகை நடத்தினர்.

தொழுகைக்குப் பின்னர் ஒருவருக்கொருவர் தழுவிக்கொண்டு அன்பை பரிமாறி கொண்டனர். ரம்ஜான் பண்டிகையையொட்டி இளைஞர்கள், சிறுவர்கள் புத்தாடை அணிந்தும், உறவினர்களை உபசரித்தும் உற்சாகமாக கொண்டாடினர். ரம்ஜான் பண்டிகையின் முக்கிய நோக்கமான ஏழை, எளிய மக்களுக்கு இஸ்லாமியர்கள் உணவு அளித்தனர்.

இந்த சிறப்பு தொழுகையின் போது தமிழக மக்கள் தன்னுரிமை அறக்கட்டளை தார்பில் தொழுகை நடத்தி திரும்பிய இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் நீர் மோர் வழங்கி தங்களது நல்வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இதில் தன்னுரிமை அறக்கட்டளை நிறுவனர் நல்வினை செல்வன், நாமக்கல் மருத்துவர் ப.எழில்செல்வன், பி.ஜனார்த்தனம், அ.ராஜேஸ், ஆ.முருகேசன், ராமசாமி, ப.ஆனந்தராஜ், அ.அப்துல்ஹக் உள்ளிட்டோர் பங்கேற்று நீர்மோர் வழங்கினர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!