ராசிபுரம் கெளரவ பலிஜிவார் நாயுடுகள் சங்கம், மேட்டுத்தெரு யுகாதி நாயுடு நண்பர்கள் குழு சார்பில் யுகாதி பெருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதனை தொடர்ந்து கெளரவ பலிஜிவார் சமுதாயக்கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பஜனை பாடல்கள் பாடி சிறப்பு வழிபாடுகள் நடத்தி அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதே போல் மேட்டுத்தெரு யுகாதி நாயுடு நண்பர்கள் குழு சார்பில் நடைபெற்ற விழாவில், ஸ்ரீஅபயஹஸ்த ஆஞ்சநேயர் கோவிலில் , ஸ்ரீராமர் பாதம் நவ மாருதி ஆஞ்சநேயர் மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கினர். பின்னர் ஸ்ரீபொன்வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து குதிரை வாகனத்தில் பெருமாள் சுவாமி முக்கிய வீதிகளில் திருவீதி உலா அழைத்துச்செல்லப்பட்டார். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.