ராசிபுரம் அருகேயுள்ள மசக்காளிப்பட்டி கஸ்தூரிபா காந்தி பார்மசி கல்லூரியில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
மக்களவை தேர்தல் நடைபெறுவதையொட்டி வாக்களிப்பதன் அவசியம் குறித்து பள்ளி, கல்லூரி, பொது இடங்களில் வாக்காளர்கள், பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மசக்காளிப்பட்டி கஸ்தூரிபா காந்தி பார்மசி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரியின் தலைவர் க.சிதம்பரம், துணை முதல்வர் பா.ஜெயலட்சுமி, பேராசிரியர்கள் முன்னிலையில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிப்போம் என்று உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். மேலும் ஓட்டுக்கு பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும் எனவும், மற்ற வாக்காளர்களும் பணம் வாங்காமல் வாக்களிக்க கேட்டுக் கொள்வோம் எனவும், சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்தையும் நினைவில் நிறுத்தி அவர்களின் நல்வாழ்வுக்கு பாடுபடுவோம் எனவும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
Home மாவட்ட செய்திகள் நாமக்கல் கஸ்கதூரிபா காந்தி கல்லூரியில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த உறுதிமொழி ஏற்பு