தென்னிந்திய அளவில் நடைபெற்ற மிஸஸ் அழகி போட்டி- ராசிபுரம் கௌசல்யா முதலிடத்தில் தேர்வு.
தென்னிந்திய அளவில் நடைபெற்ற மிஸஸ் இந்தியா அழகிப் போட்டியில் ராசிபுரம் பகுதியை சேர்ந்த கெளசல்யா (34) முதலிடம் பெற்று மிஸஸ் தென்னிந்தியா ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ராசிபுரம் பகுதியை சேர்ந்த கெளசல்யா, அண்மையில் சேலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான அழகிப் போட்டியிலும் முதலிடம் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தார்.
தற்போது திருச்சியில் நடைபெற்ற தென்னிந்திய அளவில் நடைபெற்ற மிஸஸ் அழகிப் போட்டியிலும் முதலிடம் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆடை அலங்காரம், முகப் பொலிவு அலங்காரம், போன்றவற்றில் சிறுவயது முதல் கலை ஆர்வம் கொண்ட இவர் ராசிபுரம் அருகே அழகு நிலையம் நடத்தி வருகிறார். தனியார் நிறுவனங்கள் இணைந்து நடத்திய இப்போட்டியில் முதலிடத்தில் தேர்வு பெற்ற இவருக்கு திரைப்பட நடிகை பரிசு வழங்கினார். மேலும் நடிகை கவிதா, திரைப்பட இயக்குனர் ராகதன், கலைச்செல்வன், விக்னேஸ்பாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்று பாராட்டிப் பரிசளித்தனர்.