Saturday, April 19, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeநடப்புகள்ரோட்டரி கிளப் ஆஃப் ராசிபுரம் - மாவட்ட ஆசிரியர் கல்வி நிறுவனம் இணைந்து ஆசிரியர் திறன்...

ரோட்டரி கிளப் ஆஃப் ராசிபுரம் – மாவட்ட ஆசிரியர் கல்வி நிறுவனம் இணைந்து ஆசிரியர் திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் – ராசிபுரம் ரோட்டரி ஹாலில் நடைபெற்றது.

ரோட்டரி கிளப் ஆஃப் ராசிபுரம் – மாவட்ட ஆசிரியர் கல்வி நிறுவனம் இணைந்து ஆசிரியர் திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் – ராசிபுரம் ரோட்டரி ஹாலில் நடைபெற்றது.

ரநாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், ரோட்டரி கிளப் ஆஃப் ராசிபுரம் ஆகியன இணைந்து கோடைக்கால தன்னார்வ ஆசிரியர் திறன்வளர்ப்பு பயிற்சி முகாமினை ராசிபுரம் ரோட்டரி ஹாலில் நடத்தின. செலவில்லாத பரிசோதனைக்கான மூலப்பொருளாக தண்ணீரை கொண்டு அதன் அடர்த்தி, பரப்பளவு விசை, அழுத்தம், வானவில் உருவாக்குல், வடிகட்டுதல், விசை, புவியூர்ப்பு மையம், நுண்துளை ஈர்ப்பு விசை, அணுக்கள் மற்றும் மூலக் கூறுகளின் கட்டமைப்பு, நீரைக் கொண்டு கார்பன் டை ஆக்ஸைடு உருவாக்குதல், முக்கோண பரிசோதனை, பறக்கும் காகிதத்தட்டு போன்ற பரிசோதனைகளைச் செய்வது குறித்து தன்னார்வ ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. மேலும் மாயஜால அறிவியல் சோதனைகள், ராக்கெட் ஏவுதல் குறித்த மாதிரி நிகழ்வும் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் கருத்தாளராக சேலம், விங்ஸ் ஆஃப் சயின்ஸ் அகாதெமியின் அர்விந்த் அறிவியல் விளக்கமளித்து பேசினார்.

நிகழ்ச்சியில் பேசிய நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் மு.செல்வம் பள்ளிகளில் செலவில்லாதத் திட்டங்களை மற்றும் நடைமுறைகளை உருவாக்கும் போது தொடர்ந்து அவைகள் செயல்பாடுகளாக மாறி கற்பித்தலிலும், கற்றலிலும் தொடர்ந்து கற்றல் விளைவுகளை ஏற்படுத்துகின்றன என கூறினார். இது போன்ற செலவில்லாத கற்பித்தல் -கற்றல் பொருட்களைக் கொண்ட வகுப்பறைச் செயல்பாடுகள் ஆசிரியர்களின் கற்பித்தலில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என முகாமில் பங்கேற்றுப் பேசிய ராசிபுரம் பாரதிதாசன் சாலை நகராட்சி நடுநிலைப்ப்ளியின் தலைமையாசிரியர் கு.பாரதி குறிப்பிட்டார்.

முகாமில் நடைபெற்ற பரிசோதனைகளைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களுக்குச் செய்து காட்டவும் மாணவர்களே பரிசோதனைகளைச் செய்து பார்க்கத் தூண்டும் வகையிலும் பயிற்சியில் பங்குப் பெற்ற 50 ஆசிரியர்களுக்கும் நீர் சார்ந்த பரிசோதனை செய்ய உதவும் 30 கருவிகள் அடங்கிய ஆய்வுப் பெட்டகங்களை ரோட்டரி கிளப் ஆஃப் ராசிபுரம் சார்பில் வழங்கப்பட்டது. இதனை ரோட்டரி சங்கத்தின் தலைவர் பி.சீனிவாசன், செயலர் ஆர்.ஆனந்தகுமார், ரோட்டரி மாவட்ட ( 2982) ஆசிரியர் மேம்பாடு திட்டத்தின் தலைவர் கே.எஸ்.கருணாகர பன்னீர் செல்வம் ஆகியோர் வழங்கினார். நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் துணை முதல்வர் அமீருன்னிசா விரிவுரையாளர்கள் தேவராசு, செல்லதுரை, ஆசிரியர் பாலசரவணன் ஆகியோர் முகாமில் பங்கேற்றுப் பேசினர். பயிற்சி நிறுவன விரிவுரையாளர் சிவபெருமான் பயிற்சியின் ஒருங்கிணைப்பு ஏற்பாடுகள் செய்திருந்தார்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!