நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், பிரசித்தி பெற்ற ஸ்ரீ கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. கடையெழு வள்ளல்களில் ஒருவனான வல்வில் ஓரியால் கட்டப்பட்டு வழிபட்ட சிறப்புமிக்க ஸ்ரீகைலாசநாதர் கோவிலின் திருத்தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இத்தேரோட்டத்தை சிவனடியார்கள் கைலாய மேளம் வாசிக்க ஆயிரக்கனக்கான பக்தர்கள் ஓம் நமசிவாய பக்தி கோஷத்துடன் பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்.
இக்கோவில் சித்திரை தேர் திருவிழா, கடந்த, ஏப்.14ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் கட்டளைதாரர்கள் சார்பில் சுவாமி ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து நாள்தோறும் சுவாமிக்கு மஹா அபிஷேகம், சிறப்பு வழிபாடு, திருவீதி உலா, திருக்கல்யாணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து உற்சவர் ஸ்ரீகைலாசநாதரை பக்தர்கள் ஒம் நமசிவாய கோஷத்துடன் தேரில் ஏற்றினர். தொடர்ந்து தேர் இழுக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்து அறநிலையத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சியில்
ராசிபுரம் நகரமன்ற தலைவர் முனைவர் ஆர்.கவிதா சங்கர் , எம்பி., ஏ.கே.பி.சின்னராஜ், கொங்குநாடு சேகர்,ராசிபுரம் டிஎஸ்பி., விஜயகுமார், காவல் ஆய்வாளர் கே.செல்வராசு, கோவில் செயல் அலுவலர், நகர் மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும், பக்தர்கள், பொதுமக்கள் பன பலரும் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருத்தேர் கவரைத்தெரு வழியாக இழுத்துச் செல்லப்பட்ு, கடைவீதியில் இடைநிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து 2-வது நாளான புதன்கிழமை மீண்டும் தேரிழுக்கப்பட்டு, கச்சேரி வீதிவழியாக பழைய பஸ் நிலையம் பகுதியில் நிலை வந்து சேரும். தொடர்ந்து சிவனடியார் கூட்ட அறக்கட்டளை சார்பில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் மற்றும் நீர் மோர் வழங்கப்பட்டது.