Monday, December 23, 2024
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeநடப்புகள்நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா, பறவை காய்ச்சல் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கோழிப்பண்ணைகளில்...

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா, பறவை காய்ச்சல் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கோழிப்பண்ணைகளில் ஆய்வு

கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் நோய் கண்டறியப்பட்டுள்ளது எடுத்து நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நோய் தடுப்பு பணிகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரப் படுத்தி உள்ளது.

இதனைத் தொடர்ந்து நாமக்கல் ஊராட்சி ஒன்றியம், தளிகை ஊராட்சியில் உள்ள கோழிப்பண்ணையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.உமா, பறவை காய்ச்சல் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

அண்டை மாநிலமான கேரளா மாநில ஆலப்புழா உள்ளிட்ட பகுதிகளில் பறவைக் காய்ச்சல் நோய் அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் 1,175 கோழிப்பண்ணைகளும், 6.35 கோடி பறவைகளும் உள்ளன. இதுவரை நாமக்கல் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் அறிகுறிகள் எதுவும் கண்டறியப்படவில்லை. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் பொருட்டு கோழிப் பண்ணையின் நுழைவு வாயிலில் Footpath அமைத்து அதில் குளோரின் டை ஆக்சைடு கிருமி நாசினி கலவை கலந்து வைக்க வேண்டும். மேலும், உரிய உயிரியல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

கோழிப்பண்ணைக்குள் நுழையும் மற்றும் வெளிசெல்லும் அனைத்து வாகனங்களையும் கிருமி நாசினி கொண்டு கோழிப்பண்ணையாளர்கள் சுத்தம் செய்திட வேண்டும். அனைத்து கோழிப்பண்ணைகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் உயிரியல் பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக கடைபிடிக்கவும், வழக்கத்திற்கு மாறாக பண்ணைகளில் அசாதாரண இறப்பு ஏற்படின் உடனடியாக கால்நடை பராமரிப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கோழிப்பண்ணை உரிமையாளருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் ம.செல்வராஜு, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் சி.நாராயணன் மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!