நாமக்கல் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சு.தமிழ்மணியை ஆதரித்து ராசிபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ராசிபுரம் நகராட்சி, வெண்ணந்தூர் பேரூராட்சி பகுதிகளில் திரைப்பட நடிகர் ரவிமரியா அண்மையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வெண்ணந்தூர் பகுதியில் காமராஜர் சிலை, அண்ணாசிலை, தங்கசாலை, மின்னக்கல், சர்கார்தோப்பு, அலவாய்ப்பட்டி, செளதாபுரம்,சப்பையாபுரம் பிரிவு, வெள்ளைபிள்ளையார் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், அதிமுக அரசின் சாதனை திட்டங்களை குறித்து பொதுமக்களிடம் எடுத்துக்கூறினார். அதிமுக அரசால் வழங்கப்பட்ட மாணவர்களுக்கான மிதிவண்டி திட்டம், மடிக்கணினி திட்டம், இலவச பாடநூல், தாலிக்கு தங்கம், மகளிருக்கான ஸ்கூட்டர் போன்றவற்றை குறித்தும் விவசாயிகள், விசைத்தறியாளர்களுக்கான திட்டங்கள், தொகுதி வளர்த்தி திட்டங்கள் என பல்வேறு சாதனைகளை எடுத்துக்கூறி அதிமுகவிற்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். வாக்கு சேகரிப்பின் போது ராசிபுரம், வெண்ணந்தூர் நகர ஒன்றிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.