மதிமுகவுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரிய வழக்கை நாளை (26.03.2024) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
1996 ஆம் ஆண்டு முதல் சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் பம்பரம் சின்னத்தில்தான் போட்டியிட்டதாக வைகோ தனது மனுவில் கூறியுள்ளார். கடந்த 2006ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 6 விழுக்காடுக்கு குறைவான வாக்குகள் பெற்றதால் அந்த கட்சியின் அங்கீகாரம் இழந்ததையும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் மதிமுகவுக்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்கக் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி அக்கட்சி சார்பில் கோரப்பட்டது.இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விசாரித்தார்.இது தொடர்பாக 2 வாரத்துக்குள் இறுதி முடிவை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 7 ஆம் தேதி ஆணையிட்டது. ஆனால் எந்த உத்தரவையும் தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை.
உயர்நீதிமன்றம் ஆணையிட்டும் அதன் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டி மதிமுக சார்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.