கோவை: கொங்கு மண்டலத்தில் பாஜகவிற்கு கடந்த 2019 தேர்தலில் ஒரு சீட் கூட கிடைக்காத நிலையில் இந்த முறை 2 இடங்களில் வெல்லும் என்று கருத்து கணிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் உள்ள நிலையில் கொங்கில் பாஜக 2 இடங்களில் வெற்றியை பதிவு செய்யும் என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம், அதிமுக, பிஆர்எஸ், ஏஐஎம்ஐஎம் உள்ளிட்ட மற்ற கட்சிகள் மீதமுள்ள 32 இடங்களில் வெற்றி பெறலாம் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு: திமுக ஆளும் தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் திமுகவின் இந்திய கூட்டணி 30 இடங்களிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 5 இடங்களிலும், அதிமுக 4 இடங்களிலும் வெற்றிபெறலாம் என சர்வே கணித்துள்ளது. கட்சி வாரியாக, திமுக 20 இடங்களிலும், அதிமுக மற்றும் பாஜக தலா 4 இடங்களிலும், காங்கிரஸ் 6 இடங்களிலும், பாமக ஒரு இடத்திலும், மற்றவர்கள் 4 இடங்களிலும் வெற்றி பெறலாம்.
கட்சி வாரியாக, திமுக 20 இடங்களிலும், அதிமுக மற்றும் பாஜக தலா 4 இடங்களிலும், காங்கிரஸ் 6 இடங்களிலும், பாமக ஒரு இடத்திலும், மற்றவர்கள் 4 இடங்களிலும் வெற்றி பெறலாம்.
மண்டல வாரியான கணிப்புகள்: சென்னை மொத்தம் 6 (திமுக கூட்டணி 5, அதிமுக 1), வட தமிழகம் மொத்தம் 7 (திமுக 6, என்.டி.ஏ. 1), மேற்கு தமிழ்நாடு மொத்தம் 9 (திமுக 6, என்.டி.ஏ. 2, அதிமுக 1), தென் தமிழ்நாடு மொத்தம் 10 (திமுக 7, தே.மு.தி.க. 2, அதிமுக 1), காவிரி டெல்டா மொத்தம் 7 (திமுக 6, அதிமுக 1). தமிழ்நாட்டில் திமுக, காங்கிரஸ், சிபிஐ, சிபிஐ-எம், விசிகே, ஐயுஎம்எல் மற்றும் பிற சிறிய கட்சிகளை உள்ளடக்கியது இந்தியா கூட்டணி.
கொங்கு பாஜக: கொங்கு மண்டலத்தில் பாஜகவிற்கு கடந்த 2019 தேர்தலில் ஒரு சீட் கூட கிடைக்காத நிலையில் இந்த முறை 2 இடங்களில் வெல்லும் என்று இந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் உள்ள நிலையில் கொங்கில் பாஜக 2 இடங்களில் வெற்றியை பதிவு செய்யும் என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சிறையில் அடைப்பு: 48 மணி நேரத்திற்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டால், அரசின் கடைசி தர ஊழியர் கூட சேவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாகக் கருதப்படும்போது,இவ்வளவு காலம் சிறைவாசத்திற்குப் பிறகும் ஒருவரை எப்படி அமைச்சரவையில் தொடர அனுமதிக்க முடியும் என்று நீதிபதி ஆச்சரியப்பட்டார். “அரசு ஊழியர் விஷயத்தில் காட்டப்படும் கடுமை இப்படி இருக்கும்போது,சிறைக்குள் இருக்கும் போது,இலாகா இல்லாமல் அமைச்சராகத் தொடரும் ஒருவர் இங்கே இருக்கிறார். என்ன வேடிக்கை இது. நீங்கள் பொதுமக்களுக்கு என்ன வகையான செய்தியை வழங்குகிறீர்கள்? என்று அமைச்சர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.ஆர்யம சுந்தரத்திடம் நீதிபதி கேட்டார். கடந்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார்.
அமைச்சர் ராஜினாமா: இலாகா இல்லாத அமைச்சராக நீடித்து வந்த அவர், சமீபத்தில் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் இன்னும் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.