2026-ஆம் ஆண்டுக்கான ஜே.இ.இ. மெயின்ஸ் (JEE Mains) தேர்வு முடிவுகளில் Pinnaacle Classes மாணவர்கள் சிறப்பான மதிப்பெண்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்த நிறுவனத்தில் பயின்ற 62 மாணவர்களில் 43 மாணவர்கள் 90 சதவீதத்திற்கும் (Percentile) மேல் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். இவர்களில் மூன்று மாணவர்கள் 99 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்:
சிபி சக்ரவர்த்தி: 99.43 சதம், ஹரிண்யா: 99.39 சதம், நவீன் கார்த்திக்: 99.06 சதம். இவர்களை பாராட்டும் வகையில் பயிற்சி மைய வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் நிறுவனத்தின் இயக்குனர் மதுசூதன் ரெட்டி தலைமை வகித்து மாணவர்கள், ஆசிரியர்களை பாராட்டி பேசினார்.
அவர் பேசுகையில், “எங்கள் மாணவர்களின் இந்த வெற்றி, அவர்களின் விடாமுயற்சிக்கும், பாடக் கருத்துக்களைத் தெளிவாகக் கற்பிப்பதில் எங்கள் ஆசிரியர்கள் காட்டிய அர்ப்பணிப்பிற்கும் கிடைத்த வெற்றியாகும்,” என்று பெருமிதத்துடன் தெரிவித்தார். தற்போது ஜே.இ.இ அட்வான்ஸ்டு (JEE Advanced) மற்றும் வரவிருக்கும் நீட் (NEET) தேர்வுகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் மாணவர்களுக்கு, நிறுவனம் சார்பில் தீவிர சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இப்பயிற்சி மையம் சேலம், திருச்சி, பெரம்பலூர், ராசிபுரம், ஆத்தூர் உள்ளிட்ட இடங்களில் தனது பயிற்சி மையத்தின் வாயிலாகவும், பள்ளிகளுடன் இணைந்தும் நீட், ஜெஇஇ., தேர்வுக்கு பயிற்சியளித்து வருகிறது.





